ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான 52 வேட்பாளர்களின் பட்டியலை பாரதீய ஜனதா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதில், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ரகுபர் தாஸும், சக்ரதார்பூர் தொகுதியில் மாநில பாஜக தலைவர் லட்சுமண் கிலுவாவும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஜார்க்கண்ட் ஊழல் மற்றும் உறுதியற்ற தன்மைக்கு பெயர் பெற்றது. இன்று, ரகுபார் தாஸின் தலைமையில், ஜார்க்கண்ட் அதன் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பெயர் பெற்றது. ஊழல் வீழ்த்தப்பட்டு, மாநிலம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது" என்று பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நதா ஊடகங்களிடம் தெரிவித்தார். ராஜ்மஹாலைச் சேர்ந்த அனந்த் ஓஜா, தும்காவைச் சேர்ந்த லூயிஸ் மராண்டி, மதுபூரைச் சேர்ந்த ராஜ் பாலிவால், ஹசாரிபாக்கைச் சேர்ந்த மணீஷ் ஜெயஸ்வால், தனாபாத்தைச் சேர்ந்த ராஜ் சின்ஹா, ராஞ்சியைச் சேர்ந்த சிபி சிங் ஆகியோரின் பெயர்களையும் கட்சி அறிவித்துள்ளது. 



மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 52 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை ஆளும் பாஜக வெளியிட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் மாநிலம் செதுக்கப்பட்ட பின்னர் இது ஜார்க்கண்டில் நடைபெறும் நான்காவது சட்டமன்றத் தேர்தலாகும். இதேபோல், காங்கிரஸ் கட்சியும் முதல்கட்டமாக 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. லோஹர்தகாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ்வர் ஆரோன் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.