Delhi MCD Election Result 2022 Live Update: 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை

Wed, 07 Dec 2022-5:44 pm,

Delhi MCD Election Result 2022: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை. முடிவுக்கு வந்த 15 ஆண்டுகால பாஜக ஆட்சி.

Delhi MCD Elections 2022: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவிதியை முடிவு செய்யும் உள்ளாட்சி மன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. டெல்லியில் உள்ள மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் மீது அனைவரின் பார்வையும் உள்ளன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இரண்டும் முன்னிலையில் இருக்க, எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் சொற்ப இடங்களில் முன்னணியில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல் முடிவுகளுக்காக டெல்லி மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஆவலுடன் காத்திருக்கிறது. தலைநகரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலின் முடிவுகள் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 42 மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்படும். துவாரகா, ஓக்லா, மங்கோல்புரி, பிடம்புரா, அலிபூர், மாடல் டவுன், சாஸ்திரி பார்க், யமுனா விஹார், மயூர் விஹார் மற்றும் நந்த் நகரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த மையங்கள் அமைந்துள்ளன. வாக்குகள் எண்ணப்படும் அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சுமார் 20 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸ் படையினரும், 10,000க்கும் மேற்பட்ட போலீசாரும் வாக்கு எண்ணிக்கைமையங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.


டெல்லியில் 50.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 250 வார்டுகள் கொண்ட டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (Municipal Corporation of Delhi) தேர்தலில் 1,349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். MCD தேர்தல் முடிவுகள் தேசிய தலைநகருக்கு அப்பாலும் பல அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பல்வேறு கருத்துக் கணிப்புகளின்படி, தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஆஜ் தக்-ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கெஜ்ரிவால் கட்சி 149-171 மாநகராட்சி வார்டுகளை கைப்பற்றும் என்று கூறப்பட்ட நிலையில், முடிவுகள் வேறு மாதிரி உள்ளன.  


முதன்முதலாக திருநங்கை வேட்பாளர் பாபி, சுல்தான்பூர் வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 270 வார்டுகளில் 181 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. வேட்பாளர்கள் இறந்ததால் இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. ஆம் ஆத்மி 48 வார்டுகளிலும், காங்கிரஸ் 27 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 2017 எம்சிடி தேர்தலில் வாக்கு சதவீதம் 53 ஆக இருந்தது.


புதிய எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்னதாக, டெல்லியில் மொத்தம் 272 வார்டுகள் இருந்தன.  NDMC, SDMC மற்றும் EDMC என மூன்று பிரிவுகளாக டெல்லி உள்ளாட்சி அமைப்பு செயல்பட்டுவந்தது. முந்தைய MCD, 1958 இல் நிறுவப்பட்டது. 2012ல் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது மூன்றாக பிரிக்கப்பட்டது. அவை மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

Latest Updates

  • பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய ஆம் ஆத்மி:
    134 வார்டுகளை கைப்பற்றி மகத்தான வெற்றியை டெல்லி மாநகாராட்சி தேர்தலில் பதிவு செய்துள்ளது.

     

  • வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு அழைப்பு:
    எம்சிடி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் சந்திப்புக்கு பாஜக மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

     

  • இது வெறும் வெற்றி மட்டுமல்ல, இது ஒரு பெரிய பொறுப்பு: மணிஷ் சிசோடியா (ஆம் ஆத்மி)

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லி மாநகராட்சி (எம்சிடி) தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான 126 இடங்களை கைப்பற்றி உள்ளதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் மணிஷ் சிசோடியா இது "வெற்றி மட்டுமல்ல" என்றும் "இது ஒரு பெரிய பொறுப்பு" என்றும் கூறியுள்ளார். 

    தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி துணை முதல்வர், "தேசிய தலைநகர் மக்களுக்கு நன்றி" தெரிவித்துள்ளார்.

     

  • டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை:

     

  • Delhi MCD Election Result: டெல்லி மாநகராட்சி தேர்தலலில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையை தாண்டி 126 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. பாஜக 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் 7-ல் வெற்றி, 3-ல் முன்னிலை, சுயேச்சை வேட்பாளர்கள் 3-ல் வெற்றி பெற்றனர். 

  • LIVE | டெல்லி எம்சிடி தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி கட்சி 122 வார்டுகளில் வெற்றி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இப்போது ஆம் ஆத்மி கட்சி 122 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது, மேலும் டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் முனைப்பில் உள்ளது.

  • நன்றி கூறிய ஆம் ஆத்மி திருநங்கை வேட்பாளர்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    எனக்காக உழைத்த மக்களுக்கு எனது வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இப்போது நான் எனது பகுதியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்று டெல்லி சுல்தான்புரி-ஏ வார்டில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி திருநங்கை வேட்பாளர் போபி கூறியுள்ளார்.

     

     

  • பெரும்பான்மையை நோக்கி ஆம் ஆத்மி:

    டெல்லி எம்சிடி தேர்தல் 2022: ஆம் ஆத்மி பெரும்பான்மையை நெருங்கிறது. 121 இடங்களை கைப்பற்றியது.

  • டெல்லி மாநகராட்சி தேர்தல்: பாஜகவுக்கு பின்னடைவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களை கைப்பற்றியது, பாஜக பின்தங்கியுள்ளது.

     

     

  • பாஜகவுக்கு தக்க பதிலடி - ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லி மக்கள் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக வீச முயன்ற 'கீச்சடை' (சேற்றை) இன்று டெல்லி துடைத்துவிட்டது. டெல்லியை உலகின் மிக அழகான நகரமாக மாற்றுவோம்: ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா

     

  • டெல்லியை மாநகராட்சியை கைப்பற்றும் ஆம் ஆத்மி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    250 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்று 26 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

     

     

  • #DelhiMCDPolls | 250 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆம் ஆத்மி கட்சி 106 இடங்களில் முன்னிலையும், 26 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பாஜக 84 இடங்களில் முன்னிலை பெற்று, 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

    காங்கிரஸ் 5-ல் வெற்றி, 5-ல் முன்னிலை, சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 3-ல் முன்னிலை வகிக்கின்றன. 

     

     

  • ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்று 47 இடங்களிலும், பாஜக 69 இடங்களில் வெற்றி பெற்று 32 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி நான்கு வார்டுகளில் வெற்றி பெற்று, ஐந்தில் முன்னிலை மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 2-ல் முன்னிலை பெற்றுள்ளனர்.

  • டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில், வெற்றியைக் கொண்டாடுகின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர். அதிகாரப்பூர்வமான தகவல்களின்படி, ஆம் ஆத்மி கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 56 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், கட்சியினர், வெற்றியை நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.

     வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • டெல்லி உள்ளாட்சி தேர்தலில் சுல்தான்புரி-ஏ வார்டில் ஆம் ஆத்மி வேட்பாளர் போபி வெற்றி பெற்றார். முதன்முறையாக, திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்,டெல்லி மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • MCD Election 2022: பாஜக 10 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாஜக தற்போது 96 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 121 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் 11, சுயேச்சை 5, பகுஜன் சமாஜ் கட்சி 1 என முன்னிலை பெற்றுள்ளன. 

    250 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

  • உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், தலா 112 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் 12, சுயேச்சை 4, பகுஜன் சமாஜ் மற்றும் என்சிபி தலா 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. 250 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

  • டெல்லி மாநாகராட்சி வாக்கு எண்ணிக்கையில், ஆம் ஆத்மி இப்போது 109 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 250 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

  • வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய பிறகு, தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தாலும், தற்போது பாஜக 55 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

  • MCD Election Result 2022 Live:  வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதுமே ஆம் ஆத்மி கட்சி பெரும் முன்னிலை பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 103 வார்டுகளிலும், பாஜக 86 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

  • MCD polls Counting At 42 centres: டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற எம்சிடி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 42 மையங்களில் தொடங்கியது. டெல்லி மாநகராட்சியின் 250 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 1,349 வேட்பாளர்களின் தலைவிதி இன்னும் சில மணி நேரங்களில் முடிவாகும். 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சாஸ்திரி பார்க், யமுனா விஹார், மயூர் விஹார், நந்த் நகரி, துவாரகா, ஓக்லா, மங்கோல்புரி, பிடம்புரா, அலிபூர் மற்றும் மாடல் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

    பதிவாகியுள்ள 50.48 சதவீத வாக்குகள் எண்ணிக்கைத் தொடங்கிவிட்டது. ஆம் ஆத்மி, பிஜேபி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 65.72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்ற வார்டு எண். 5 (பக்தவர்பூர்) மற்றும் குறைந்த (33.74 சதவீதம்) வார்டு எண்.145 (ஆண்ட்ரூஸ் கஞ்ச்) வார்டுகளுக்கான வாக்கு யாருக்கு என்று அறிந்துக் கொள்ள டெல்லிவாசிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link