Gujarat Assembly Election 2022: அதிகரிக்கும் வாக்குப்பதிவு! மதியம் 1 மணி நிலவரப்படி 34.48% வாக்குகள் பதிவு

Thu, 01 Dec 2022-2:18 pm,

Gujarat First Phase Vidhan Sabha Chunav 2022: குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி 34.48% வாக்குகள் பதிவு

Gujarat First phase Vidhan Sabha Chunav 2022 Live Updates: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தில் காலை 11 மணி நிலவரப்படி 11.75% வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டு கட்டங்களாக நடைபெறும் குஜராத் சட்டசபை தேர்தலில் புதிய அரசு அமைய மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். பல தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் வர முயற்சிக்கும். அதே வேளையில், பாஜக தனது கோட்டையை தக்கவைத்துக்கொள்வதில் நோக்கமாக உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்ற பிறகு தனது எல்லையை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. மும்முனைப் போட்டி களமாக உள்ள குஜராத்தில் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குபதிவு நடைபெறவுள்ளது.


14,382 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். மொத்தமுள்ள 788 வேட்பாளர்களில், 70 பேர் பெண்கள், பாஜக சார்பில் 9 பேர், காங்கிரஸால் 6 பேர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியால் 5 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் (Congress) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP) தவிர, பகுஜன் சமாஜ் கட்சி (BSP), சமாஜ்வாதி கட்சி (SP), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் (CPI-M) மற்றும் பாரதிய பழங்குடியினர் ககட்சி (BTP) என 36 அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகளும் பல்வேறு இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

Latest Updates

  • கலோல் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது கூட்டம் கூட்டமாக கூடிய மக்கள்!

     

  • எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ, அவ்வளவு அதிமாக தாமரை மலரும் - பிரதமர் மோடி
    ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் இந்த நிலைக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு குடும்பத்தை நம்புகிறார்கள், ஜனநாயகத்தை அல்ல. குடும்பத்துக்காக வாழ வேண்டும் என்றால் அது உங்கள் விருப்பம், ஆனால் ஒன்றை எழுதுங்கள், எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ அவ்வளவு தாமரை மலரும் என பிரதமர் கூறினார். 

    காங்கிரஸின் 100 தலை ராவணன் கமெண்டுக்கு பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி

  • பிரதமர் மோடியை அவமானப்படுத்தியற்கு குஜராத் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: அமித் ஷா
    அகமதாபாத்தில் நடந்த சாலை பேரணியின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தில் ஒவ்வொரு முறையும் பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் அவதூறாகவும், இழிவாகவும் பேசி வருகிறது. இதற்கு ​​​​பொதுமக்கள் வாக்குப் பெட்டி மூலம் பதிலடி கொடுப்பார்கள். இந்த முறையும் மோடியின் அவமானத்திற்கு குஜராத் மக்கள் பதில் சொல்வார்கள்.

  • குஜராத் சட்டசபை தேர்தல் 2022:
    ராஜ்கோட் நகரில் மதியம் 12 மணி வரை 26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. ராஜ்கோட் மாவட்ட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என்று ராஜ்கோட் ஆட்சியர் அருண் மகேஷ் தெரிவித்தார்.

     

  • Gujarat Elections Update: மாவட்ட வாரியாக பதிவான வாக்கு நிலவரம்:

    அம்ரேலி 19%
    பருச் 17.57
    பாவ்நகர் 18.84
    பொட்டாட் 18.50
    டாங்ஸ் 24.99
    தேவபூமி துவாரகா 15.86
    கிர்-சோம்நாத் 20.75
    ஜாம்நகர் 17.85
    ஜூனாகத் 18.85
    கட்ச் 17.62
    மோர்பி 22.27
    நர்மதா 23.73
    நவ்சாரி 21.79
    போர்பந்தர் 16.49
    ராஜ்கோட் 18.98
    சூரத் 17.92
    சுரேந்திரநகர் 20.67
    தபி 26.47
    வல்சாத் 19.57

  • 100 வயது முதியவர் வாக்களித்தார்:
    வல்சாத் மாவட்டத்தின் உம்பர்கான் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் 100 வயதான கமுபென் படேல் வாக்களித்தார். அவரின் விரலில் மை இருக்கும் புகைப்படத்தை தேர்தல் ஆணையம் ட்வீட் செய்துள்ளது. 

  • அண்மை நிலவரப்படி குஜராத்தில் காலை 11 மணி வரை 18.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாவ்நகரில் உள்ள ஹனோலில் வாக்களித்தார். மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் சூரத்தில் வாக்களித்தார்.

    சூரத்தில் மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் வாக்களித்தார், "மக்கள் மாநிலத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு வாக்களிக்கின்றனர். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வாக்களித்துள்ளனர், நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்" என்று கூறினார்.

  • குஜராத்தில் காலை 11 மணி நிலவரப்படி 11.75% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் ராஜ்கோட்டில் உள்ள முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த மந்ததாசிங் ஜடேஜ் தாக்கூர் சாஹேப் மற்றும் காதம்பரி தேவி ஆகியோர் இன்று வாக்களித்தனர். வாக்குச்சாவடிக்குக் அவர்கள் விண்டேஜ் காரில் வந்தனர்.

  • குஜராத் சட்டசபை தேர்தல் 2022: வாக்களிக்கும் முன் மன்சுக் மாண்டவியா கிராம மக்களை சந்தித்தார்

    மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனோல் கிராமத்தில் வாக்களிக்கும் முன் கிராம மக்களை சந்தித்து உரையாடினார்.

  • பெருந்திரளாக வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: ராகுல் காந்தி
    குஜராத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், வாக்களியுங்கள்...

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வேலை வாய்ப்புக்காக
    மலிவான எரிவாயு சிலிண்டர்க்காக
    விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக

    குஜராத்தின் நல்ல எதிர்காலத்திற்காக, பெருந்திரளாக வாக்களித்து இந்த ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்யுங்கள்.

    -ராகுல் காந்தி, காங்கிரஸ்

     

  • முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி வாக்களித்தார்:
    ராஜ்கோட்: முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மனைவி அஞ்சலி ரூபானியுடன் அனில் கியான் மந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க வந்தார்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று விஜய் ரூபானி நம்பிக்கை தெரிவித்தார்.

     

  • சைக்கிளில் காஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு வாக்களிக்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏ
    அம்ரேலி: பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை நினைவூட்டும் வகையில், காஸ் சிலிண்டரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வாக்களிக்க செல்லும் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி

     

  • பெண் வாக்காளர்கள்:
    #குஜராத்தேர்தல்2022 | சூரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பெண் வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நின்றுள்ளனர்.

     

  • முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த வேண்டும்: பிரதமர் மோடி கோரிக்கை
    குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் - பிரதமர் மோடி, பாஜக

     

  • ஆர்வத்துன் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா, 
    கடந்த இரண்டு தசாப்தங்களில், குஜராத் மாநிலம் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு உதாரணமாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறது. குஜராத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான அரசால் இது சாத்தியமானது.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்த வளர்ச்சிப் பயணத்தைத் தொடர, முன்னெப்போதும் இல்லாத ஆர்வத்துடனும் எண்ணிக்கையுடனும் வாக்களிக்குமாறு முதல் கட்ட வாக்காளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் 

    -அமித் ஷா, பாஜக

     

  • குஜராத் மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்த மணீஷ் சிசோடியா
    குஜராத் மாநிலத்தில் 27 ஆண்டுகளாக பொது மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து தனது நண்பர்களுக்கு வாரி வழங்கி வரும் கட்சியை, இம்முறை ஆட்சியில் இருந்து அகற்ற வாக்களியுங்கள். 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வி, ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை மற்றும் ஒவ்வொரு குஜராத் குடிமகனுக்கும் நல்ல சுகாதார வசதிகளுக்காக உங்கள் வாக்கை அளியுங்கள்.

    உங்கள் வாக்குகளின் அடிப்படையில்தான் உங்கள் சொந்த குடும்பமும் ஒட்டுமொத்த குஜராத்தும் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நகரும்.
    - மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி

     

  • அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஜடேஜாவின் மனைவி ரிவாபா 
    இன்று மிக முக்கியமான நாள். அனைத்து பாஜக வேட்பாளர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். அனைவரும் வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்: ரிவாபா ஜடேஜா, பாஜகவின் ஜாம்நகர் வடக்கு தொகுதி வேட்பாளர்.

  • வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நவ்சாரி பாஜக வேட்பாளர் பியூஷ் படேல் மீது அடையாளம் தெரியாத 40-50 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக்குதல் என்று பியூஷ் படேல் கூறுகிறார். அவர் தாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு ஆதரவாக கட்சியினர் பிலர் சம்பவ இடத்தில் கூடினர். இது தொடர்பாக புகார் பதிவு செய்துள்ளார்.

  • 2022 குஜராத் சட்டசபை தேர்தலில் 39 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. 718 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 70 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே 27 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருவதால், பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link