தவறான தகவல்களை பாஜகவினர் பரப்பிவருவதால் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்கப்போவதில்லை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது. நரேந்திர மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடியின் பதவி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மமதா பானர்ஜி திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், தவறான தகவல்களை பாஜகவினர் பரப்பிவருவதால் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என மமதா பானர்ஜி தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவிவ்த்துள்ளார். 



இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில்; "வாழ்த்துக்கள் புதிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களது அழைப்பை ஏற்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், கடந்த ஒரு மணி நேரமாக நான் பல்வேறு ஊடகங்களிலும் பார்க்கக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைகளில், பாஜகவை சேர்ந்த 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் எதுவும் நடக்கவில்லை. இந்த கொலைகள் தனிப்பட்ட பகை காரணமாகவோ அல்லது குடும்ப தகராறு காரணமாகவோ அல்லது வேறு பிரச்சினைகள் காரணமாகவோ, நடந்து இருக்கலாம். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அதுபோன்ற எந்த ஆதாரமும் கிடையாது. 


எனவே, 'என்னை மன்னித்துவிடுங்கள் நரேந்திர மோடி ஜி' நான் உங்களது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க போவது இல்லை. 


இந்த விழா என்பது ஜனநாயகத்தை கொண்டாடக் கூடிய ஒரு திருவிழா. இதை அரசியல் ஆதாயத்துக்கு எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது. எனவே, ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ" என மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.