தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவிந்திரநாத் குமார் முன்னிலை பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அமமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


இந்த தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.


தற்போதைய நிலவரப்படி ரவீந்திரநாத் குமார் 90251 வாக்குகளுடனும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 72849 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அமமுக-வின் தங்க தமிழ்ச்செல்வன் 25780 வாக்குகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளனர். 


நாம் தமிழர் கட்சியில் ஷாகுல் அமீது 5258 வாக்குகளுடனும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராதா கிருஷ்ணன் 2616 வாக்குளுடனும் உள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் NOTA-விற்கு 1930 வாக்குகளும் பதிவாகியுள்ளது.