நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி குஜராத் சென்று தனது தாயிடம் ஆசிபெறுகிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஸீ - ஜிம்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் உள்ளிட்ட பல்வேறு உலகத்தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 


இந்நிலையில், நேற்று பாஜகவின் பாராளுமன்ற குழு கூடி மோடியை மீண்டும் பிரதமராக ஒருமனதுடன் தேர்ந்தெடுத்தனர். இதை தொடர்ந்து, வரும் 30 ஆம் தேதி பதவியேற்கும் விழா நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பதவியேற்பு விழாவை விட, சிறப்பாக இம்முறை விழாவை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு உலகத்தலைவர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி, இன்று குஜராத் சென்று தனது தாயிடம் ஆசிபெறுகிறார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத் மாநிலம் செல்வதாகவும், அங்கு தாயை சந்தித்து அவரது ஆசியை பெற உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திங்கட்கிழமை அன்று வாரணாசி தொகுதிக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.