TN election 2021: நடனப்புயல் பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வீடியோ வைரல்

நடிகர் பிரபுதேவா தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக பாடும் பாடல் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் அனைவரும், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: நடிகர் பிரபுதேவா தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக பாடும் பாடல் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் அனைவரும், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரைப்பட நடிகர், நடன ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபுதேவா. இவை மட்டுமல்ல, அவர் தமிழக தேர்தலுக்கான விளம்பரத் தூதராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
ஏன் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், நமது உரிமை என்ன, வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது போன்ற பல செய்திகள் அடங்கிய வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பிரபுதேவாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இதற்கு முன்னதாக, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதும் பிரபுதேவா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | TN Election 2021: உட்கட்சிப் பூசலால் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR