TN Election 2021 Live: எச்சரிக்கை! முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

காங்கிரஸை விட்டு விலகுவதாக சொல்வது வதந்தி என எம்.எல்.ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2021, 03:57 PM IST
    உட்கட்சிப்பூசலால் திணறும் கட்சி...
Live Blog

காங்கிரஸை விட்டு விலகுவதாக சொல்வது வதந்தி என எம்.எல்.ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

காங்கிரஸில் நிலவும் உட்கட்சிப் பூசலால், விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என போர்க்கொடிகள் உயர்ந்துள்ளன. அதேபோல், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட எஞ்சிய 4 தொகுதிகளிலும் இழுபறி நீடிக்கிறது. எனவே இதனால் வேட்பாளா்களை அறிவிப்பு தாமதம் ஆகி வரும் நிலையில், கட்சியில் இருந்து தான் விலகப்போவதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி என்கிறார் எம்.எல்.ஏ விஜயதரணி.  

அதேபோல், காங்கிரஸின் கோட்டையான புதுச்சேரியில், அதிக தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு கொடுக்கப்பட்டதற்காக கட்சியில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் கட்சியினரின் போக்கு, தலைமையின் கவலைகளை அதிகரித்துள்ளது.

16 March, 2021

  • 18:30 PM

    ஏப்ரல் 6 ஆம் தேதி பொது விடுமுறை

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

  • 16:00 PM

    முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

    தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • 13:15 PM

    சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக மாற்ற எந்த ஒரு திட்டமும் இல்லை

    நாட்டின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை மாற்றும் விதமாக எந்த ஒரு திட்டமும் இல்லை என இன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

  • 13:00 PM

    ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர்  மாற்றம்

    ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர்  பா.  மாதவனுக்கு பதிலாக எம்.சிவகுமார் போட்டியிடுகிறார் என  தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

    Dravida Munnetra Kazhagam

  • 12:45 PM

    பொன். ராதாகிருஷ்ணன் வேட்புமனுவை தாக்கல்

    கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார் முன்னால் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

  • 12:45 PM

    வேட்புமனு தாக்கல் - கூடுதல் அவகாசம் வேண்டும்:

    தமிழக தேர்தலில் வேட்புமனு தாக்கல்  செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

  • 09:00 AM

    திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது. 

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதி யில் போட்டியிட நேற்று மனுத்தாக்கல் செய்தார். அதில் அவர் அறிவித்த விவரங்களில், தனக்கும், மனைவிக்கும் 29.62 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

  • 07:15 AM

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 111 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. cVIGIL செயலியில் வந்த 695 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல் தெரிவித்தார்.

Trending News