மத்தியில் மீண்டும் பாஜக புதிய அரசு அமைக்கவிருக்கும் நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களை சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.



நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பிரதமராக மீண்டும் மோடி வரும் 30-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 


இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். உடல்நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை.


இக்கூட்டத்தில் 16-வது மக்களவை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய அரசு அமைக்க வேண்டி பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர்கள் மற்றும் தனது ராஜினாமா கடித்தை வழங்கினார். 


ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் புதிய அரசு அமைக்கும் வரை மோடியை தொடர்ந்து பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்