தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி இன்று பொறுப்பேற்றுள்ளது. பல மூத்தத் தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அமைச்சர்களில் மிகவும் தகுதியான மாநில அமைச்சர் என்று அனைவராலும் பாராட்டப்படும் ஒருவர் இடம் பெற்றிருக்கிறார்.  அவர் தான் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.


தமிழக முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான பி.டி. ஆர் பழனிவேல் ராஜனின் மகன் பழனிவேல் தியாகராஜன்.


Also Read | கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - EPS and OPS தரப்பு மோதல்


அவரது தாத்தா பி.டி.ராஜன் 1936 இல் தமிழ்நாடு பிரசிடென்சியின் முதல்வராக பதவி வகித்தவர். கே.கே.நகரில் உள்ள பி.டி.ராஜன் சாலை அவரது தாத்தாவின் பெயரிடப்பட்டது!


இந்த அறிமுகம் அவரது குடும்பத்தைப் பற்றியது. பழனிவேல் தியாகராஜன் திருச்சிராப்பள்ளியின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர். செயல்பாட்டு ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் படித்தவர்.  


நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் மனித காரணிகள் பொறியியல் / பொறியியல் உளவியல் (Ph.D. in Human Factors Engineering / Engineering Psychology) பட்டம் பெற்றார். 


Also Read | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே


MIT Sloan School Of Management எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பை முடித்தார்.


லெஹ்மன் பிரதர்ஸ் (Lehman Brothers) மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியில் (Standard charted bank) பணிபுரிந்தவர்.


Also Read | CSK வீரர்கள் அனைவரும் கிளம்பிய பிறகே தோனி ராஞ்சிக்கு செல்வார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR