IPL 2021: CSK வீரர்கள் அனைவரும் கிளம்பிய பிறகே தோனி ராஞ்சிக்கு செல்வார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களுக்கு புறப்பட்டப்  பிறகு தான் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராஞ்சிக்கு புறப்படுவார் என்று கூறப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 6, 2021, 10:56 PM IST
  • CSK வீரர்கள் அனைவரும் கிளம்பிய பிறகே தோனி ராஞ்சிக்கு செல்வார்
  • தோனி வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசினார்
  • அணியினர் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்ததை உறுதி செய்த பின்னரே, ஊருக்கு கிளம்புவேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்
IPL 2021: CSK வீரர்கள் அனைவரும் கிளம்பிய பிறகே தோனி ராஞ்சிக்கு செல்வார் title=

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களுக்கு புறப்பட்டப்  பிறகு தான் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராஞ்சிக்கு புறப்படுவார் என்று கூறப்படுகிறது. 

கேப்டன் தோனி, தனது அணியின் அனைத்து உறுப்பினர்களுடனும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசினார். அப்போது, அணியின் வீரர்கள் அனைவரையும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிய பிறகே, தான் ராஞ்சிக்கு விமானம் ஏறுவேன் என்று தெரிவித்துள்ளார்.  

“முதலில் அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டினர் வெளியேற வேண்டும், பின்னர் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் அணியினர் அனைவரும் தங்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்ததை உறுதி செய்த பின்னரே, தான் தனது ஊருக்கு கிளம்புவேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்”என்று சிஎஸ்கே உறுப்பினர் ஒருவர் கூறியதாக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Also Read | Stop Rumors: CT Scan கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல உறுப்பினர்கள் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

COVID-19 இன் கொடிய இரண்டாவது அலை இந்தியாவை மிகப் பெரிய அளவில் தாக்கியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகள், இந்தியாவில் இருந்து பயணிகள் தங்கள் நாட்டிற்கு பயணிக்கத் தடை விதித்துள்ளன. அணியின் 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் நேற்று லண்டனில் தரையிறங்கினர்.

கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன் மற்றும் ஈயோன் மோர்கன் ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர், அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | 79.4% திறனுடன் ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா அங்கீகாரம்

"இந்தியாவில் 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் நேற்றிரவு ஹீத்ரோவுக்கு கிளம்பினார்கள். அவர்கள் இன்று காலை லண்டனில் தரையிறங்கியுள்ளனர். அவர்கள் இப்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன் (பஞ்சாப் கிங்ஸ் இருவரும்) மற்றும் ஈயோன் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு கிளம்பிவிடுவார்கள்"என்று ஈசிபி செய்தித் தொடர்பாளர் ஜீ தொலைகாட்சியிடம் உறுதிப்படுத்தினார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் பல ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்களுக்கு COVID-19 பாதிப்பு ஏற்பட்டதால் பணக்கார லீக் போட்டி காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டது.

Also Read | Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News