ராகுல் பிறப்பின் போது உடன் இருந்த செவிலியர் ராஜம்மா பற்றி...
ராகுல் காந்தி பிறந்தபொழுது உடன் இருந்த கேரளாவை சேர்ந்த செவிலியரை இன்று சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்!
ராகுல் காந்தி பிறந்தபொழுது உடன் இருந்த கேரளாவை சேர்ந்த செவிலியரை இன்று சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கு விதமகா மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் அமோதியில் தோற்கடிக்கப்பட்ட ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்று மக்களவை சென்றுள்ளார். இதனால் தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்று தந்த கேரளா மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராகுல் கேரளா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் இன்று கேரளாவின் வயநாட்டில்., தான் பிறந்தபொழுது செவிலியராக பணியாற்றிய ராஜம்மா என்பவரை ராகுல் காந்தி நேரில் சந்தித்தார். அப்பொழுது பழைய நினைவுகளை பற்றி ராஜம்மாவிடம் பகிர்ந்துக்கொண்டார்.
ராகுல்காந்தியை சந்தித்தது குறித்து ராஜம்மா கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ராகுல்காந்தி பிறந்தபோது அருகிலிருந்த செவிலியர்களின் நானும் ஒருவர், அவருக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். ஆதலால் பலாப்பழத்தால் செய்யப்பட்ட சிப்ஸையும், இனிப்பையும் அவருக்கு அளித்தேன்" என கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 1970-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் நாள் டெல்லி மருத்துவமனையில் பிறந்தார். ராகுல் காந்தி பிரப்பின் போது அவரது தாயார் சோனியா காந்தியின் பிரசவத்தை பார்த்த செவிலியர்களுள் ஒருவர் ராஜம்மா ஆவார். 72 வயது ராஜம்மாவிற்கு 49 ஆண்டுகள் கழித்து இன்று தான் கையில் ஏந்திய சிறு குழந்தை அவரின் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக நேரில் சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.