ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 


பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டும் தனித்து வெற்றி பெற்றது. அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களிலும் வென்றன. மற்ற கட்சிகள் 98 இடங்களில் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது. இந்த தோல்விக்கு தாமாக பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தற்போதைய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி உள்ளார். இந்நிலையில், தமிலகத்திம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டும் தான் அவர் விரைவில் காங்கிரஸ் தலைவராவார் என தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து, நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுதல் காந்தி தான் என்றும், அவர் விரைவில் காங்கிரஸ் தலைவராவார் எனவும் கூறினார். எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.  அதிமுகவில் கள பணியை விட பண பணியே அதிகம் நடப்பதாக விமர்சித்த திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் தனியாகத்தான் கட்சி தொடங்குவார் என்றும் வேறொரு கட்சியில் சேர்ந்து பணியாற்றமாட்டார் எனவும் தெரிவித்தார்.