நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 345-க்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில் ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை 272 இடங்களில் பாஜக தனித்து முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல் முறையாக குறிப்பிடத்தக்க தொகுதிகளை வென்றுள்ளது. உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னணி பெற்றுள்ளது. இந்த நிலவரங்களை வைத்து பார்த்தால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் என்பதில் சந்தேகமே இல்லை.


இந்தநிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்படி வாய்ப்பு அளிக்க வில்லை என்றால், எனது ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக அழித்து விடுவேன் என உறுதிப்படக் கூறிக்கொள்கிறேன்.. "ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.