இலங்கையின் 8-ஆவது ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் வழக்கத்திற்கு மாறாய் பல விநோதங்கள் நடைபெற காத்திருக்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம், இலங்கை தேர்தல் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் இது என கருதப்படுகிறது. மேலும் இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆனது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது. அதாவது, 1 மணி நேரம் கூடுதலாக வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது.


இத்தேர்தலில் 50%+1 வாக்குகளை பெறுபவரே வெற்றி பெற்றதாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்காரணமாக இத்தேர்தல் முடிவும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் வழக்கம்போன்று யாரும் 50% மேல் பெறமாட்டார்கள் என்ற ஊகம் நிலவிவரும் நிலையில், தற்போது 50%+1 வாக்குகள் என்ற அடிப்படையில் வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.


ஆக சிறுபான்மையினத்தவரின் வாக்குகளே இம்முறையும் 8-ஆவது ஜனாதிபதியை தேர்வுசெய்யவிருக்கின்றது என்ற செய்தி பெரும்பான்மையினத்திற்கு ஒரு கசப்பான உண்மை. ஆனால் தவிர்க்க முடியாதது. 19-வது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் ஐந்து ஆண்டுகள் கொண்ட காலப்பகுதிக்கு பதவி வகித்தல் வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. 1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பே மக்களால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் முறைமைக்கு வித்திட்டது. அதற்கு முன்னர் தேசாதிபதி பிரதமரால் தெரிவுசெய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


35 வேட்பாளர்கள் களம் காணும் இந்த தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50%-க்கு அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால் வெற்றியை அல்லது புதிய ஜனாதிபதியை எவ்வாறு தீர்மானிப்பது என்பது பற்றி அறியவேண்டியது அவசியமாகும். அதற்காகவே விருப்பு வாக்கு அளிக்கப்படுகிறது. ஏனைய தேர்தலுக்கு தமது விருப்பைத் தெரிவிக்க புள்ளடியை மட்டும் இடுவோம். ஆனால், தற்போது 1 2 3 என்று விருப்பு வாக்குகள் அளிக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது.


முதலாவது வாக்கெண்ணலின் போது எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை எனும் பட்சத்தில், இந்த 1 2 3 என்ற விருப்பு வாக்குகளின் பக்கம் வாக்கெண்ணல் திரும்பும். அதாவது, ஒருவர் இடுகின்ற 2-ஆம் 3-ஆம் விருப்பு வாக்குகள் பெறுமதியானவையாகப் போகின்றன. ஆக விருப்ப வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு எண்ணப்படும்போது ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகூடிய 2-ஆம் விருப்பு வாக்குகளைப் பெற்றவரைப் போய் சேரும்.


இதுவை இலங்கை தேர்தல் வரலாற்றில் இவ்வாறானதொரு குழப்பமான தேர்தல் நடைப்பெற்றதில்லை, இந்நிலையில் தற்போதைய தேர்தல் இலங்கை மட்டுமல்லாது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.