மடியில் கனம் இல்லையென்றால் ஏன் இந்த பயம், பரபரப்பு?: திமுக-வை சாடும் முதல்வர் பழனிசாமி
செந்தாமரை மற்றும் இன்னும் பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தமிழகத்தில் `அரசியல் நோக்கத்துடனான பண விநியோகத்தை` பரிசோதிக்கும் நோக்கம் கொண்டவை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை: திமுக கட்சித் தலைவர் மு.க ஸ்டாலினின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து திமுக தலைவர்கள் ஏன் ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்குகிறார்கள் என்று தமிழக முதல்வர் கே பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஒருவரிடம் மறைக்க எதுவும் இல்லை என்றால் அவர் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
”சில அமைச்சர்கள் உட்பட பல அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களின் வீடுகளிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டார்கள். ஆனால் அதற்கு எங்கள் கட்சியில் யாரும் எதுவும் கூறவில்லையே” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், அதிமுக (AIADMK), நடத்தப்பட்ட சோதனைகளுக்கு எதிராக, சனிக்கிழமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைகள் "தேவையற்றவை" என்றும் காங்கிரஸ் மற்றும் திமுகவின் உத்தரவின் பேரில் இவை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிமுக கூறியுள்ளது.
"திமுக, மு.க. ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகள் குறித்து பெரிய பிரச்சினையை உருவாக்கி வருகிறது. ஒருவருக்கு மறைக்க எதுவும் இல்லை என்றால், ஏன் பயப்பட வேண்டும்?" என்று தேர்தல் பேரணியில் உரையாற்றும் போது திரு பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சென்னையில் ஸ்டாலினின் (MK Stalin) மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியது தொடர்பாக, தி.மு.க, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடியது மட்டுமல்லாமல், இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு "அரசியல் நோக்கம்" இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.
ALSO READ: மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்து திருவிளையாடலா?
செந்தாமரை மற்றும் இன்னும் பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தமிழகத்தில் "அரசியல் நோக்கத்துடனான பண விநியோகத்தை" பரிசோதிக்கும் நோக்கம் கொண்டவை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக முதல்வர் பழனிசாமி (Edappadi K Palaniswami) மேலும் கூறுகையில், வருமான வரித் துறை அதிகாரிகள் தகவல்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட சொதனைகளை மேற்கொள்கிறார்கள் என்றும், உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை திமுக நினைவில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செந்தாமரை ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவரா என்றும், அவரது வீட்டை சொதனையிட முடியாதா என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார். ஒரு ஜனநாயக நாட்டில், எங்கு வேண்டுமானாலும் இப்படிப்பட்ட சோதனைகளை மெற்கொள்ள முடியும் என்று முதலமைச்சர் மேலும் தெளிவு படுத்தினார்.
ALSO READ: தமிழகத்தில் இன்றுடன் முடிகிறது தேர்தல் பரப்புரை: இன்று பிரச்சாரத்தின் உச்சக்கட்டம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR