மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்து திருவிளையாடலா?

தமிழகத்தின் வரும் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், திமுக-வுக்கு நெருக்கமான இடங்களில் நடக்கும் இரண்டாவது சோதனையாகும் இது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 2, 2021, 02:26 PM IST
  • மு.க. ஸ்டாலினின் மருமகன் சபாரீசனின் வீட்டில், வருமான வரி சோதனைகள்
  • வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள நீலாங்கரையில் சபரீசனின் வீட்டில் சோதனை.
  • சபரீசன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தமாரையின் கணவர் ஆவார்.
மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்து திருவிளையாடலா? title=

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபாரீசனின் வீட்டில், வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டன. அவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் தற்போது சோதனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. 

வெள்ளிக்கிழமை காலை சென்னையில் உள்ள நீலாங்கரையில்  உள்ள சபரீசனின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

ஏ.என்.ஐ செய்தியின் படி அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மெற்கொண்டுள்ளனர். 

சபரீசன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் (MK Stalin) மகள் செந்தமாரையின் கணவர் ஆவார். 

சபரீசன் மற்றும் கார்த்திக் மோகன் ஆகியோருக்கு சொந்தமான வளாகங்கள் வருமான வரித் துறையினரின் இலக்காக உள்ளதாகத் தெரிகிறது. 

ALSO READ: TN Election 2021: வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தவறு செய்துவிட்டதா அதிமுக?

சபரீசன் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து ஓ.எம்.ஜி என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் திமுக-வின் ஐ.டி பிரிவு பணிகளை கவனித்து வருகிறது. பிரஷாந்த் கிஷோரின் ஐ.பாக் உடனான ஒப்பந்தம் உட்பட திமுக-வின் அனைத்து ஆன்லைன் நடவடிக்கைகளிலும் சபரீசனுக்கு முக்கிய பங்கு உள்ளது.

தமிழகத்தின் வரும் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் (Assembly Election) நடக்கவுள்ள நிலையில், திமுக-வுக்கு நெருக்கமான இடங்களில் நடக்கும் இரண்டாவது சோதனையாகும் இது. கடந்த மாதம், திருவண்ணாமலை மற்றும் சென்னையில் இவி.வேலுவின் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

1993 ல் வேலு நிறுவிய திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியுடன், ஸ்டாலின் சிறிது காலம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சோதனைகளுக்கு பின்னார் அரசியல் காரணங்கள் இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

ஏப்ரல் 6 ம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு  தமிழகம் தயாராகிவரும் நிலையில், இந்த வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதால், இது பலரது கவனத்தைக் கவர்ந்துள்ளது. 

"விருந்தினர் மாளிகையில் திமுக (DMK) தலைவர் தங்கியிருந்த அறையில் சோதனைகளை நடத்துவது பொருத்தமற்றது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. அங்கு அவர்களால் எதையும் எடுக்க முடியவில்லை” துரைமுருகன் கூறினார்.

ALSO READ: வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News