புதுடில்லி: 2019 மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. லோக் சபா தேர்தல் முடிவுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவின் அடிப்படையில் பெரிய மோடி அலையின் காரணமாக பா.ஜ.க 350 இடங்களை பெற்று மீண்டும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் 2019 தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது, 2014-ல் பெற்ற இடங்களை விட அதிகமான இடங்களை பி.ஜே.பி கைப்பற்றியுள்ளது. மோடியின் கவர்ந்திழுக்கும் பேச்சால் லோக் சபா தேர்தலில் 2019 தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க பெரும் வாய்ப்பை பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் குறிப்பாக வட மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் கைப்பற்றி உள்ளது. மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மா மாநிலங்களில் கூட பாஜக குறிப்பிட்ட தொகுதிகளை பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தை பொருத்த வரை பாஜகவின் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் பாஜக அலை ஒரே கோட்டில் பயணித்தாலும், தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை தான் காணப்படுகிறது என்பதற்கான காரணம் தேர்தல் முடிவில் தெரிந்துவிட்டது 


தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளில் வேலூரை தவிர்த்து தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு தொகுதி தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக போட்டியிட்டா ஐந்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.


நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ட்விட்டரில் #TNRejectsBJP என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.