மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன்: மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்வராகத் தொடர விருப்பமில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்!!
மேற்கு வங்க முதல்வராகத் தொடர விருப்பமில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்!!
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழ் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கடந்த முறை 34 தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனால், இம்முறை 22 இடங்களாக சரிந்தது. அதுமட்டுமல்லாமல் 8 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 4 இடங்களில் பாஜக வென்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 3 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்தது. மேலும் அம்மாநிலத்தில் BJP-யின் வாக்கு சதவீதம் 40.25 ஆக அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் அவசரக் கூட்டத்துக்கு அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அவரது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா;
மிக நீண்ட தேர்தலாக இது அமைந்திருந்ததால் கடந்த 5 மாதங்களாக பணி செய்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது. மத்தியப் படைகள் அனைத்தும் எங்களுக்கு எதிராக செயல்பட்டது. அறிவிக்கப்படாத அவசர நிலை ஏற்படுத்தப்பட்டது. வாக்குகளுக்காக ஹிந்து, முஸ்லிம் இடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து எல்லாம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் அவர்கள் பாஜக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனை தடைகளைக் கடந்தும் எங்களுடைய வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான சூழலில் எதுவும் பாவமில்லை. நாங்கள் காங்கிரஸ் போன்று அடிபணியவும் இல்லை. எனக்கு முதல்வராகத் தொடர விருப்பமில்லை. இதை கூட்டம் தொடங்கும்போதே கட்சியினரிடையே அறிவித்துவிட்டேன் என்று பேசினார்.