விவசாயி தற்கொலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்திக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயநாட்டை சேர்ந்த விவசாயி தினேஷ்குமார் என்பவர் கடன் சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தினேஷ்குமாரின் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும், இறந்தவரின் குடும்பத்துக்கு உதவக்கோரியும் வயநாடு தொகுதி எம்.பி ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். 


அதில், விவசாயி தினேஷ் குமார் தற்கொலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் எனவும், விவசாயிகள் தற்கொலை குறித்த நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.