அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச, வெளிநாட்டு கல்வியாளர்களை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச வழிவகுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்த, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 


அப்போது அவர் தெரிவிக்கையில் இந்தாண்டு 9-ஆம் வகுப்பு படிக்கும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு லண்டன், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளிர் இருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 6 மாதகால பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.


முன்னதாக, தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் புகுத்துவது குறித்த தகவல்கள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அதன்படி முதற்கட்டமாக நடப்பாண்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி வேலை நாட்கள் 170-லிருந்த 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.