போட்டியில் தோற்றுப் போவது என்பது எதிரியின் திறனையும், பலத்தையும் பொறுத்தது என்பதால் போட்டியில் தோற்றுப் போவதைப் பற்றி கவலைப்படக்கூடாது.  ஆனால் தனக்கு வழங்கப்பட்ட ஒன்றில் தானே தோற்றுப்போவது என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அது குறித்து மறுபரிசீலனை செய்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெற்றியும் தோல்வியும் இரவும் பகலும் போன்றதே. சூரியனின் இருப்பும், மறைப்பும் ஒரு நாளை தீர்மானிப்பது போலவே, ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துபவை. வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை படிக்கட்டுகளாகவும், வெற்றிகளை பாடங்களாகவும் அவதானிப்பவர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்தில் தோல்விக்கான வாய்ப்புகள் குறைகின்றன. இவை அனைத்தும் வாழ்க்கையின் முதுமொழிகள் அல்ல. என்றென்றும் நடைமுறையில் இருக்கும் நிதர்சன வார்த்தைகள்.


Also Read | Ayurveda: ஆயுர்வேத கல்வி படித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம், இது காலத்தின் கட்டாயம் 


அதிலும் குறிப்பாக தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி, வாழ்வில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த சூத்திரத்தை பின்பற்றுவது நன்மையைக் கொடுக்கும்.மாணவர்கள் மட்டுமல்ல, மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த சூத்திரம் மிகவும் பலனளிக்கும்.


அவர்களே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு அடித்தளம் இடுகின்றனர். ஒரு கட்டடத்திற்கு அடித்தளம் இடும்போது பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களைப் போன்றே, தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை கட்டமைக்கும் பொறுப்பில் இருக்கும் பெற்றோர் இந்த சூத்திரத்தை பயன்படுத்தினால் எந்நாளும் நிம்மதி நிச்சயம்...