இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என செல்லப்பெயரால் அழைக்கப்படும் ராகுல் திராவிட்டின் இளமைகால வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் சனவரி திங்கள் 11-ஆம் நாள் 1973-ஆம் பிறந்தவர் ராகுல் திராவிட். சிறந்த மட்டையாளர், குச்சக் காப்பாளர் என பெயர் பெற்ற இவர் இந்திய கிரிக்கட் அணிக்காக 1996-ஆம் ஆண்டு விளையாட துவங்கி 164 டெஸ்ட், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 



உலகின் முன்னணித் கிரிக்கெட் வீரர்களுல் ஒருவராக புகழப்படும் ராகுல் திராவிட் அக்டோபர் 2005-ல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூலம் வழங்கப்படும் 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' விருதினை 2004-ஆம் ஆண்டு பெற்ற இவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை புரிந்தவர். 


டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் என்ற பெருமையினை பெற்றவர். டெஸ்ட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார் என பல சாதனைகள் பட்டியலை நீட்டிய இவர் தனது இளமை காளத்தில் புகழின் உச்சிக்கே சென்றார்.


கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அல்ல நல்லொழுக்கத்திலும் இவருக்கு இணை இவர் தான் என நிறுபிக்கும் வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.


ராகுல் திராவிட் தனது இளமை காளத்தில் புகழின் உச்சிக்கு சென்றபோது, அவரிடம் பெண் நிருபர் ஒருவர் தவறாக நடந்துக்கொள்ள முற்படுகின்றார். ஆனால் திராவிட் அவரிடம் இருந்து தப்பி செல்ல முற்படுகின்றார். தற்போது #MeToo விவகாரத்தில் எதிர்பாராத பலர் சிக்கி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்திவரும் நிலையில் ராகுல் திராவிட்டின் இந்த வீடியோ சற்று ஆறுதல் அளிக்கிறது...