China: தற்போது பருவமழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சீனா இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டுள்ளது. அசாதாரணமான கடும் மழையினால் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.  தெற்கு சீனாவில் சுமார் 15 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்துவதற்காக வியாழக்கிழமையன்று சீனாவில் IV நிலை அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Ministry of Emergency Management அமைச்சகமானது வெளியிட்ட அறிவிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹுனானை தலைமையகமாக கொண்டு செயல்படும் The State Flood Control and Drought Relief எனப்படும் மாநில வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண அமைப்பு, ஹூபே மற்றும் அன்ஹுய் மாகாணங்களுக்கு பணிக்குழுக்களை அனுப்பியுள்ளதாக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.


Also Read | Russia: அரசியல்சாசனத் திருத்தத்திற்கு மக்கள் அமோக ஆதரவு 2036 வரை புடின் அதிர்பராக நீடிக்கலாம்


தற்போதைய வெள்ள நிலைமையை சாமாளிக்க, வெள்ளக் கட்டுப்பாடு, அவசரகால மீட்பு மற்றும் பேரழிவு நிவாரணம் என பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சீன அமைச்சகம் மேலும் கூறுகிறது.  


வானிலை கண்காணிப்பை உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு, கனமழையால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


யாங்சே ஆற்றில் கட்டப்பட்டுள்ள Three Gorges Dam எற அணையானது வியாழக்கிழமையன்று ஆண்டின் முதல் வெள்ளப் பெருக்கின் தாக்கத்தை எதிர்கொண்டது. வினாடிக்கு 50,000 கன மீட்டர் என்ற அளவில் நீர் வரத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


வெள்ளத்தால் ஏற்பட்ட அவசரநிலைமையை கருத்தில் கொண்டு 4,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஹூபே மாகாணம் பணியமர்த்தியுள்ளது.


Also Read | தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் ஜூலை 6 முதல் திறக்கப்படுகின்றன


தெருக்களில் நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.  வெள்ளமானது ஆற்று பாலத்தையும் மூழ்கடித்துள்ளது.


யாங்சே ஆற்றில் ஏற்பட்டிருக்கும் இந்த வெள்ளத்தினால் அணையின் நீர்மட்டம் அபாயகட்டத்தை தாண்டிவிட்டது.  உடனடியாக நீரை வெளியேற்றும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.  இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.