கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற அவகாசம் நீட்டிப்பு!!
தமிழகத்தில் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற அவகாசம் நீட்டிப்பு!!
தமிழகத்தில் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற அவகாசம் நீட்டிப்பு!!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி திடீர் தீவிபத்து ஏற்பட்டதை தொடா்ந்து, தமிழகத்தின் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த சம்பவம் தொடா்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக மார்ச் 16-ஆம் தேதிக்குள், பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், கடை வியாபாரிகள் சார்பில் தொடர்ந்த வழக்கில், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவகாசத்தை நீட்டித்துள்ளது. மேலும், தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் கொடுத்துள்ளது.