பயங்கரவாதிகளை ஒழிக்க கடும் நடவடிக்கை: சுஷ்மா விளக்கம்!!
பயங்கரவாதிகளை ஒழிப்பதுடன் அவர்களுக்கு ஆதரவு, அளிக்கும் நாடுகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-
இன்று உலகம் பல சவால்களை சந்தித்து வருகிறது. அதில் மிகவும் முக்கியமானது சர்வதேச பயங்கரவாதம். இதனை சமாளிக்க வலிமையான பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
மனித உரிமை, அமைதி மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கு விரோதமானதாக பயங்கரவாதம் செயல் பட்டு வருகின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், பயங்கரவாதிகளை ஒழிப்பதுடன் அவர்களுக்கு ஆதரவு, அளிக்கும் நாடுகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, பயங்கரவாதத்தை ஒழிக்க பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் மற்றும் சீன வெளியுறவு அமைச்சரும் கலந்து கொண்டனர்.