ஏர்வாடியில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு  100 க்கும் மேற்பட்டோருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடந்தது. விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்டு விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். 


விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் மற்றும் தண்ணீர் வந்துள்ளது. இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற பலரும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில், அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் யாருக்கும் எவ்வித பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று மருத்துவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கண் எரிச்சல் போன்ற பாதிப்புக்கு மருந்து எடுத்துக் கொண்ட பின் 2 நாளில் சரியாகிவிடும் என்று தெரிவித்த அவர், ஹாலஜன் விளக்கின் கேஸ் கசிவு காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். 


மேலும், ஏர்வாடியில் அரசு உதவிபெறும் பள்ளி ஆண்டுவிழாவில் அதிக சக்திவாய்ந்த விளக்குகளைப் பயன்படுத்தியதால் பள்ளி மாணவர்களுக்கு கண் பாதிப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.