தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுக்கோட்டை பகுதியில் மழை பெய்தது. மேலும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரள உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரும்.


இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14, 15-ம் தேதி அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.


குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறைந்து மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்க கூடும். இதன் காரணமாக வட தமிழக உள் மாவட்டங்களிலும் மற்றும் தென் தமிழகம் முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெறிவித்துள்ளார்.


இந்நிலையில் வரும் 16 வரை மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


பூம்புகார், தரங்கம்பாடியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், அடுத்த மாதம் மீன்பிடிக்க தடைகாலம் வருவதால் மீனவர்கள் வேதனையில் உள்ளனர்.


மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார், வானகிரி, கீழமூவர்க்கரை, திருமுல்லைவாசல், பழையாறு, தரங்கம்பாடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட விசை படகுகள் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது.....! 


தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை மையம்கொண்டுள்ளது. மேலும் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு காற்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றும் தென் இந்தியா பகுதியில் சந்திக்கிறது.


இதன் காரணமாக வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழையும் பெய்யும். சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை அடுத்து 2 நாட்களுக்கு பெய்யும்.


இதையடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை தூவும் எனவும் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.