புதுடெல்லி: புதுடெல்லி திலக் நகரில் மதுபானம் வாங்குவதற்கு பணம் கொடுக்க மறுத்த முதியவரை நாண்கு இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வியாழன் அன்று இரவு திலக் நகர் டர்மினல் வழியாக சென்ற 46-வயது மதிப்புதக்க நபர் ஒருவரினை அப்பகுதி ரிக்ட்ஷா ஓட்டுநர்கள் வழிமறித்து பணம் கேட்டு அடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ரோகிட் ஷின்டே(31), சந்தோஷ் கஷ்பே(36), அஸ்வின் கைக்கிவிடே(35) மற்றும் அமோல் ஜோக்டேன் (28) என்னும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விசாரணையில் தங்களது மதுபான தேவைக்காக பாதிக்கப்பட்டவரிடம் பணம் கேட்டதாகவும், அதற்கு அவர் தர மருத்ததால் அவரை தாக்கி அவரிடம் இருந்து பணம் திருடிச்சென்றதாகவும் தெரிகிறது.


இச்சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக காவல்துறை அதிகாரி விஜய் கையேறி தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து ரூ.18000 மற்றும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிளியினை தட்டிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட நான்கு பேரின் மீது IPC 394 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!