ரஜினியின் காலா படம் ஏப்- 27ஆம் தேதி ரிலீஸுக்கு தடை!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் காலா ரிலீஸ் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் காலா ரிலீஸ் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ரஜினியுடன், ஹுமா குரேசி, நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி 'காலா' படத்தின் டீசர் காட்சிகள் கடந்த மார்ச் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னதாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து, ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிற்கிறது, இதனால் கடந்த மார்ச் 1-ம் தேதி புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனவே, மார்ச் 16 முதல் சென்னையில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அஜித்தின் விசுவாசம் படத்திற்காக செட் போட்டப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. வருகிற 23-ம் தேதி முதல் வெளியூர்களில் நடக்கும் படப்பிடிப்பும் நிறுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் காலா ரிலீஸ் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்த பின்னர் வரிசை என் அடிப்படையில் மட்டுமே இந்த மாத படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.