உலகின் மிகவும் பிரபலமான இணைய தேடுதல் ஜாம்பவான் கூகிள்-ன் புதிய பதிப்பில் 50-க்கும் மேற்பட்ட தேவையில்லாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க நிறுவனமான அல்பேபர்ட் இன்க் நிறுவனத்தின் ஒரு பிரிவான கூகிள் சமீபத்தில் தனது Chrome 66 பதிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் தேவையற்ற அமைப்பகள் என கருதப்படும் 50-க்கு மேற்பட்ட செயலிகளை தடை செய்துள்ளது.


இணையதளங்களை திறக்கையில், பயனரின் அனுமதி இன்றி தானாக இயங்கும் தானியங்கி (auto-plays) செயல்பாடுகளை கூகிள் நிறுவனம் தடை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தானியங்கி சாதனங்களை கட்டுப்படுத்த வசதிகள் இருந்த போதிலும் அதற்கு குறைந்தப்பட்சம் 6 வினாடிகள் செலவிட வேண்டி இருப்பதாக பயனர்கள் தங்களது புகார் கருத்தில் தெரிவித்து இருப்பதால் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு இருப்பதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இசை கோப்புகளை கொண்ட சில இணையதளங்களை பயனர்கள் திரக்கையில் அதில் உள்ள பாடல்கள் தானாக இயக்கப்படுவதை நாம் பார்த்திருப்போம். அதே வேலையில் கூகிள் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படும் விளம்பரங்கள் சிலவும் தானாக ஒலிப்பதினை பார்த்திருப்போம். இத்தகைய செயல்பாடுகளானது சம்பந்தப்பட்ட இணையப் பங்கங்களின் தரத்தினை குறைப்பதாக இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதனால் தற்போதைய Chrome 66 பதிப்பில் இந்த தானியங்கிளை தடை செய்து வெளியிட்டுள்ளது கூகிள்!