கூகிள் நிறுவனத்தின் குரல் உதவியாளனான Google Assistant-க்கு சுமார் 4.5 லட்சம் தற்போது திருமண கோரிக்கைகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகிள் நிறுவனத்தின் குரல் உதவியாளனான Google Assistant தற்போது பிரபல கூட்டமைப்பு குழுவான Ever Growing Club-ன் திருமணம் ஆகதவர்களுக்கான குழுவுடன் இணைந்துள்ளது. இதனால் திருமணங்கள் குறித்த வினவல்கள் அதிகமாகவே Google Assistant-ல் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளதன் படி இந்த Google Assistant-ல் இதுவரை 4.5 லட்சம் திருமண வினவல்கள் வந்துள்ளதாக தெரிகிறது.


Google Assistant என்பது கூகிள்-ன் அதிகாரப்பூர்வ பயன்பாடாகும், இது ஸ்மார்ட்போன்கள் 'முகப்புப்பக்கத்தில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது மைக்ரோஃபோனில்' OK Google' என்று கூறுவதன் மூலம் பயன்படுத்தலாம். அதாவது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை மெய்நிகர் உதவியாளராக மாற்ற அனுமதிக்கின்றது.


முன்னதாக Google Assistant, 8 மொழிகளில் (ஆங்கிலம், ப்ரஞ்ச், ஜெர்மன், இட்டாலி, ஜப்பானிஸ், கொரியன், ஸ்பேனிஸ், போர்ட்கீஸ்) பயனர்களின் கட்டளைகளை புரிந்து செயல்பட்டது. இதனையடுத்து விரைவில் ஹிந்தி மொழி உள்பட 30 மொழிகளில் செயல்படும் வகையில் இந்த செயலி மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையது Allo பதிப்புகளில் வெளியானது. 


இதனையடுத்து, Android 6.0+ பதிப்புகளில் வெளியாகியுள்ளது. விரைவில் Android 5.0+ Lollipop, Android Oreo (Go edition), மற்றும் iPhones (iOS 9.1) போன்களில் வெளியாகும் என கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் தற்போது Google Assistant, பிரபல கூட்டமைப்பு குழுவான Ever Growing Club-ன் திருமணம் ஆகதவர்களுக்கான குழுவுடன் இணைந்துள்ளதன் மூலம், சுமார் 4.5 லட்சம் திருமண வினவல்களை இளைஞர்களிடம் இருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளயாகியுள்ளது.