கேரள மாநிலம் அட்டபாடி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை, ஆம்புலன்ஸ் இல்லா காரணத்தால் போர்வையால் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் பாலக்காடு பகுதிக்கு உட்பட்ட அட்டப்பாடி என்னும் கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நகரத்திற்கு சரியான சாலை அமைக்கபடாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த ஜூன் 7 அன்று, அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் பகுதியினுள் வர இயலாததால், அவரது உறவினர்கள் அவரை போர்வையை பள்ளாக்காய் கொண்டு அவரை மருத்துவமணைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னர் மீண்டும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.


முன்னதாக கடந்த 2012-13 காலக்கட்டத்தில் இதேப்போன்ற சம்பவம் நடைப்பெற்றதை அடுத்து அப்பகுதியில் தரைப்பாலம் அமைக்க ரூ.9.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை இப்பகுதியில் பாலம் அமைக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது!