கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 24-4-2010 அன்று பஞ்சாயத்து ராஜ்-ஐ நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சட்டம் அறிமுகப்படுத்த நாள் நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானதுஇன்று கொண்டாடப்பட்டது.


மத்திய பிரதேச மாநிலம் மண்டலா மாவட்டத்தில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 


அப்போது அவர் கூறியதாவது....! 


மத்திய அரசின் ராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, கிராம சுயராஜ்ஜியத்தை காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்ததாக குறிப்பிட்டார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கான செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.



கிராமப்புற வளர்ச்சியை பொருத்தமட்டில் நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவமானது. ஆனால், கடந்த ஆண்டுகளில் இதில் பல குறைபாடுகள் இருந்தன. ஆனால், ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி வெளிப்படையாகவும், உரிய முறையிலும் செலவழிக்கப்படுகிறதா? என்பதன் அவசியம் தொடர்பாக மக்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த மோடி, மகாத்மா காந்தி எப்போதுமே கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததாகவும், கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் கிராம சுயராஜ்ஜியம் பற்றி வலியுறுத்தி பேசி வந்ததாகவும் குறிப்பிட்டார்.