துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் தமிழகமே போர்களமாக காட்சியளிகின்றது. 


இந்நிலையில், நேற்று சென்னை உயர்நீதிமன்றம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மறுஉத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மறு ஆய்வு குறித்து முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு மனு தாக்கல் செய்த்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த மனுவை பிற்பகலுக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.