குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3.7 ஆக பதிவு!
குஜராத்தில் இன்று மாலை சுமார் 4.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் சுமார் 3.7 ஆக பதிவாகி உள்ளது...!
குஜராத்: குஜராத்தில் இன்று மாலை சுமார் 4.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் சுமார் 3.7 ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கம் தெதியப்படா, சாக்பரா மற்றும் ராஜ்பிப்லா ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக கூறபடுகிறது.
இது காந்திநகரில் இருந்து தெற்கே 213 கி.மீட்டர் தொலைவில் பரூச் அருகே மையம் கொண்டுள்ளது எனவும் நிலவியல் வல்லுனர்ஹல் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
2001 ஜனவரி 31ம் தேதி குஜராத் மாநிலம், கட்ஜ் பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,67,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில், அடுத்தடுத்த நில அதிர்வுகள் குஜராத் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளன.