Mera Ration 2.0 App Full Details Check Here: ரேஷன் பொருள்களை மக்கள் வாங்குவதன் விதிகளில் அரசு பல மாற்றங்களை செய்துள்ளன. நீங்கள் ரேஷன் கடைகளுக்கு செல்லும்போது ரேஷன் கார்டுகளை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதில் Mera Ration 2.0 செயலியை உங்களின் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தாலே, அதை காண்பித்து நீங்கள் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் போன்ற தொழில்நுட்பங்கள் இப்0போது இந்தியாவின் கிராமப்புறங்கள், பின்தங்கிய பகுதிகளிலும் நுழைந்து, மூலைமுடுக்கெல்லாம் பரந்துவிரிந்துள்ளன. எனவே மக்கள் எளிமையான முறையில் ரேஷன் பொருள்களை பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவரும் நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த சில முன்னெடுப்புகளையும் அரசு எடுத்திருக்கிறது.
Mera Ration 2.0
அந்த வகையில், இந்த Mera Ration 2.0 செயிலி அரசால் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்பட்டது. இது ரேஷன் கார்டு கையில் இல்லாமலேயே ரேஷன் வாங்குவதற்கு உதவும். முன்பெல்லாம் ரேஷன் கடைகளுக்குச் செல்லும்போது ரேஷன் கார்டை கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும். தற்போது இந்த செயலி மூலம் உங்களின் ஆதார் எண்ணை செலுத்தியே ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | தமிழக அரசு வழங்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு தொகை! இவர்களுக்கு கிடைக்காது!
செயலியை பயன்படுத்துவது எப்படி?
Mera Ration 2.0 செயலியையும் நீங்கள் மற்ற செயலிகளை தரவிறக்கம் செய்வது போல், ஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்யலாம். இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தரவிறக்கம் செய்த பின்னர், பயனர் அவரின் ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
அதன்பின், ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒரு OTP எண் மெசேஜில் வரும். அதை செயலியில் உள்ளீடு செய்தால் உங்களின் ரேஷன் கார்டின் டிஜிட்டல் வடிவம் அந்த செயலியில் தோன்றும். அதை காண்பித்தே எளிமையாக நீங்கள் ரேஷன் பொருள்களை வாங்கலாம். ரேஷன் கார்டை வீட்டில் மறந்துவைத்துவிட்டால் உடனடியாக ரேஷன் அட்டையை காண்பிப்பதற்கு இது மிகப்பெரிய அளவில் உதவும்.
இது எதற்கு உதவும்...
ஒருவேளை ரேஷன் அட்டை தொலைந்துவிட்டாலோ, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் காணாமல் போய்விட்டாலோ புதிய ரேஷன் கார்டை பெறும்வரை இதை காண்பித்துக் கூட உங்களால் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும். எனவே, இன்றே இந்த செயலியை மொபைலில் தரவிறக்கம் செய்து, உங்களின் ரேஷன் கார்டை அதில் வைத்துக்கொள்ளுங்கள். அவசர காலத்தில் கைக்கொடுக்கும். ரேஷன் கடைகளில் மட்டுமில்லை, வேறு ஏதேனும் அடையாள அட்டை தேவைப்படும் இடத்தில் கூட இதை நீங்கள் காண்பிக்கலாம்.
எனவே, வீட்டில் இருக்கும் இளசுகள் தங்களின் பெற்றோர் அல்லது வீட்டின் மூத்தோரிடம் இந்த செயலி குறித்து தகவல் கூறி அவர்களின் ஸ்மார்ட்போனில் இந்த செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லுங்கள். நிச்சயம் அவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.
மேலும் படிக்க | அரிசி ரேஷன் கார்டு vs சர்க்கரை ரேஷன் கார்டு : யாருக்கு தை மாதம் ரூ.2000 கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ