விழாவில் பிடித்த பாடலை இசைக்காத DJ-வுக்கு கத்தி குத்து!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனக்கு பிடித்த பாடலை இசைக்காத நபரினை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
டெல்லி: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனக்கு பிடித்த பாடலை இசைக்காத நபரினை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
டெல்லி ராப்டர் பாரில் நேற்று இரவு விஜய்தீப் என்பவர் தனது பிறந்தநாளினை கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது ஒலிக்கப்பட்ட பாடல் ஆனது தனக்கு பிடிக்கவில்லை என அவர் DJ-விடம் வாக்குவாதம் நடத்தியுள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் விஜய்தீப்பினை DJ கத்தியால் குத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைவதற்கு முன்னதாகவே விஜய்தீப் சம்பவயிடத்தில் பலியாகியுள்ளார். சம்பவத்தின் போது ஏற்பட்ட சலசலப்பில் பாரினில் இருந்த ஊழியர்கள் ஓட்டமெடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இருவரையும் விலக்க முயன்ற பெண் ஒருவருக்கு தலையில் அடிப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட DJ-வின் மீது வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.