H. ராஜா-வின் கருத்துக்கு தமிழகம் முழுவது போராட்டங்கள் தீவிரம்!!
தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து தமிழகம் முழுவது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூர்யில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் செயலுக்கு தூண்டியதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தப் பெண் நிருபர், சமூக வலைதளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டார்.
“நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை” என குறிப்பிட்டார் கனிமொழி.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக பா.ஜனதா தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.’ என பதிவிட்டார்.
எச்.ராஜாவின் டுவிட்டிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எச்.ராஜா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.