ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்கவுள்ளார்கள், இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹன்சால் மேத்தா இயக்கப் போகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார். 


முதலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக என கூறப்பட்டது. அனைத்து விசாரணைக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இரவு நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.


அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின் உடல் முதலில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். 


நண்பகல் 2 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாலை 3.30 மணியளவில் மும்பை, வில்லேபார்லே மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.


நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஸ்ரீதேவிக்கு 16ம் நாள் சடங்கு சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். 


இவர் வாழ்க்கையில் கடைசி காலங்கள் இன்றும் பல மர்மங்கள் இருந்து வருகின்றது, அவர் கஷ்டத்தில் இருந்தார் என சிலர் சொல்கின்றனர். ஒரு சிலர் போனிகபூரால் ஸ்ரீதேவி மிகவும் கஷ்டப்பட்டார் என்று சொல்லி வருகின்றனர், இதுமட்டுமின்றி அவர் மரணமே ஒரு புரியாத புதிராக தான் உள்ளது.


இந்நிலையில், தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹன்சால் மேத்தா இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம். 


அந்த படத்தில் ஸ்ரீதேவி வேடத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளாராம் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹன்சால் மேத்தா.


வித்யா பாலன் ஏற்கனவே தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நாயகி சில்க்கின் வாழ்க்கை வரலாறில் நடித்து தேசிய விருது வென்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.