சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் பொங்கல் வாழ்த்துகள் தொடங்கி அனைத்தையும் தமிழில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அந்த புத்தாண்டு நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.


இந்த நிலையில், ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை இணைத்துள்ளார்.


தமிழா இது உன்னுடைய புத்தாண்டு.


சோகங்கள்,துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும்.


புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும்.


உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.