அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரி பிரபாகரன் கட்சியிலிருந்து நீக்கம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் நாய்கள் என்று அதிமுக சமூக வலைதள பிரிவை சேர்ந்த நிர்வாகி ஹரி பிரபாகரன் சமீபத்தில் டிவிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.


இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காலை தூத்துக்குடியில் சிகிச்சை பெறும் மக்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் தூத்துக்குடி மருத்துவமனைக்கு உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


இதையடுத்து, பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் நாய்கள் என்று அதிமுக சமூக வலைதள பிரிவை சேர்ந்த நிர்வாகி ஹரி பிரபாகரன் சமீபத்தில் டிவிட் செய்தார். இவருக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் கோபமாக டிவிட் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து ஹரி பிரபாகரன் தனது டிவிட்டை டெலிட் செய்துள்ளார். மேலும் அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மனமுடைந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


இந்த நிலையில், ஹரி பிரபாகரன் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை மேற்கொண்டு அவரை கட்சியில் இருந்து நீக்கினர். இவர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்!