உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைகிறார்கள் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து தி லான்ஸெட் ஆன்லைனில் 195 நாடுகளில்  நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறி இருப்பதாவது:-


உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது மற்றும் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43வது இடத்திலும் , பிரிட்டன் 23வது இடத்திலும்,  சீனா 140வது மற்றும் இந்தியா 118 வது இடத்திலும் உள்ளன.


பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில்  சராசரியாக 3 கிராம் தான்  ஒரு நாளைக்கு  உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள்  10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள். சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.


உணவு தொடர்பான வருடாந்திர இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்து உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது. என கூறப்பட்டுள்ளது.