புகை பிடிக்க கற்றுக் கொடுத்து புற்றுநோய் வரக் காரணமாக இருந்த நண்பரை ஒரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகமது மற்றும் இனாயத் ஆகிய இரு இளைஞர்களும் மேற்கு டெல்லியில் உள்ள ஒரு உணவு விடுதியில் சமையல் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் அகமதுவின் மைத்துனருக்கு சொந்தமான உணவு விடுதியில் வேலை பார்த்து வந்தனர். 


இனாயத்தை விட அகமத் வேலையில் அதிக திறமைசாலி. திறமை காரணமாக இனாயத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதிலிருந்து அகமதுக்கு இனாயத் மேல் பகை உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. 


மேலும் இனாயத் மூலமாக அகமதுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டானது. சிகரெட்டில் போதைப் பொருளை வைத்துப் புகைக்கும் பழக்கத்தையும் இனாயத் பழக்கி உள்ளார். அகமது எல்லை மீறி புகைக்க தொடங்கியதால் அவனுக்கு தொண்டையில் புண் வந்திருப்பதாக மருத்துவரை அணுகினார். மேலும் அகமதுவின் அளவுக்கு மிஞ்சிய புகைப்பழக்கத்தால் புற்று நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் சொல்லி உள்ளார். 


இந்நிலையில் இனாயத் தனக்கு புகை பழக்கத்தை ஏற்படுத்தியதால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அகமது நினைத்து உள்ளார். இதனால் வெலையில் கவனம் செலுத்த முடியாததால் வேலையை இழந்து அவர் தனது சொந்த கிராமத்துக்கு சென்ற துப்பாக்கியை வாங்கி குறி பார்த்து சுடப் பழகிக்கொண்டார்.


பின்னர் டெல்லிக்கு திரும்பிய அகமது தனது மைத்துனரிடம் இனாயத்தை பற்றி கூறி அவரை வேலையில் இருந்து எடுக்க சொல்லி உள்ளார். ஆனால் மைத்துனர் ஒத்துக் கொள்ளவில்லை. ஆத்திரமடைந்த அகமது தனது நண்பர் இனாயத்துடன் வாய்ச்சண்டையில் ஈடுபட்டுள்ளார்.  சண்டையின் இடையில் துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டார்.


மருத்துவமனைக்கு எடுத்துக் செல்லப்பட்ட இனாயத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கிருந்து  தப்பி ஓடிய அகமதை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். பிறகு அவர் உத்தம் நகரில் தனது உறவினர் வீட்டில் தான் முன்னதாக கொடுத்திருந்த பணத்தை திரும்ப வாங்க வந்திருப்பது கண்டறியப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.


தற்போது போலீசார் அகமதுவை விசாரித்து வருகிறார்கள். அகமது குற்றத்தை ஒப்புக் கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக போலீசாரால் தெரிவிக்கப் பட்டுள்ளது.