குடல் சுத்தம் பேசுவது ஆரோக்கியத்தில் பாதி பிரச்சனைகளை குறைப்பதற்கு சமம். ஏனென்றால் நாள்தோறும் உண்ணும் உணவுகள் கழிவுகளாக வெளியேறிவிட்டால் எந்த பிரச்சனையும் வராது. ஆனால், அந்த நடைமுறை சரியாக இல்லாமல் கழிவுகள் உடலில் தேங்க ஆரம்பித்தால் தோல்வியாதி உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். வயிறு உப்புசமாக இருக்கும், தோலில் கடுமையான அரிப்பு, ஆசன வாயில் புண், வாயுத்தொல்லை, அசுத்தமான வாயு அடிக்கடி வெளியேறுதல் உள்ளிட்ட எண்ணற்ற அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். இப்படி இருந்தும் தங்களுக்கு இது ஏன் ஏற்படுகிறது என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முக சுருக்கங்கள் மாயமாய் மறைய... வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!


உடனடியாக கவனித்து இந்தப் பிரச்சனைக்கு நிவாரணம் தேடினால் பல ஆரோக்கிய தொல்லைகளில் இருந்தும், மன தொல்லைகளும் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகாது. நேரம் மற்றும் பணப்பிரச்சனை உள்ளிட்டவைகளையும் நீங்கள் சேமிக்க முடியும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் இத்தகைய பிரச்சனைகள் வரும் என்று நீங்கள் எண்ணிவிடாதீர்கள். உடல் மெலிதாக இருப்பவர்கள் கூட இப்படியான சிக்கல்களை நாள்தோறும் எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் கவனம் கொள்ளமாட்டார்கள் அல்லது இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என அசால்டாக கடந்து செல்வார்கள். அப்படியானவர்களில் நீங்களும் இருந்தால் வருமுன் காப்பது என்ற நிலையில் உடனடியாக குடலில் இருக்கும் கழிவுகளை போக்க முயற்சி செய்யுங்கள். 


குடலின் கலோன் பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுகள் தான் உங்களின் அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் ஆரம்ப புள்ளியாக இருக்கும். செரிமான அமைப்பு கோளாறுகள், பலவீனம், வீக்கம், குமட்டல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தோல் பிரச்சினைகள் இருந்தால் இதனை சரி செய்ய இந்த நடைமுறைகளை பின்பற்றுங்கள். 



இஞ்சி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, அன்னாசிப் பழம் ஆகிய பழங்களின் ஜூஸ்களை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் இருக்கும் சத்துகள் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுவதுடன், செரிமான மண்டலம் சீராக செயல்படவும் உதவும். மேலும், கல்லீரல் மற்றும் கலோன் பகுதிகளின் ஆரோக்கியத்தை பேணவும் உதவும். கழிவுகளை வெளியேற்ற பாத்ரூமில் அமரும்போது 90 டிகிரியில் அமராமல் 35 டிகிரியில் அமர்ந்து கழிவுகளை வெளியேற்றுங்கள். தினமும் உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை மறக்காமல் குடியுங்கள்.  கட்டாயம் நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தை உடற்பயிற்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்வதை தடுக்க முடியாது.  அதேநேரத்தில் உங்களின் பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவரை அணுகுவது கட்டாயம். பொது தகவல்களை வைத்து உங்களின் பிரச்சனையின் தீவிரத்தை நீங்களாகவே அணுமானம் செய்து கொள்ளாதீர்கள். இது பெரிய பிரச்சனைகளுக்கு வித்திடவும் வாய்ப்பிருக்கிறது என்பதால், தகவல்களை தெரிந்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ