தேக ஆரோக்கியத்தில் தோல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக வெளிப்படையாக தெரிந்துவிடும். சில சத்துகள் குறைந்தால் தோல் சோர்வடைந்து வயதான தோற்றத்தை கொடுக்க தொடங்கிவிடும். இதனை தடுக்க வேண்டும் என்றால் சத்தான உணவை உட்கொள்வது மூலம், பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதுளையும் புதினா:


உடல் ஆரோக்கியத்தில் மாதுளை பழத்தின் பங்கு  மிக அதிகம். உடல்நிலை சரியில்லாமல் யாராவது இருந்தாலும் கூட மாதுளை ஜூஸ் கொடுப்பார்கள். அந்தளவிற்கு மாதுளை உடலுக்கு நல்லது. குறிப்பாக மாதுளை தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு மிக நல்லது. மாதுளையில் உள்ள விட்டமின் சி மற்றும் கே, தோலில் புது செல் உருவாகி தோல் பளபளப்பாக உதவுகிறது. மாதுளையால் தோல் ஆரோக்கியம் பெற்று புத்துணர்ச்சியாகிறது. ப்ரஷான மாதுளை பழங்களை எடுத்து மிக்ஸியில் அரைத்து ஜூஸ் போட்டுக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் தண்ணீர் சிறிதளவு சேர்த்து அதில் ஐஸ் கட்டிகளையும், சில புதினா இலைகளையும் சேர்த்துக்குடிக்கலாம். சிலர் சிறிதளவு பாலும் சேர்ப்பார்கள். வேண்டுமானால் சேர்க்கலாம்.


மேலும் படிக்க | காபி / டீ -க்கு ஒரு மாதம் 'நோ' சொன்னா என்ன நடக்கும்? என்னென்மோ நடக்கும்... சொல்லி பாருங்க!!


வெள்ளரிக்காயும், எலுமிச்சை 


வெயில்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த காய் தான் வெள்ளரி. உடலுக்கு குளிச்சி என்பதை தாண்டி நம் உடலின் தோல் ஆரோக்கியத்துக்கு வெள்ளரி மிக முக்கியமான ஊட்டச்சத்தை தருகிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. வெள்ளரியால் தோலில் உள்ள கருப்புள்ளிகள் நீங்குகின்றன. வெள்ளரியின் தோலை நன்றாக சீவிய பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரையும், எலுமிச்சை சாறையும் சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து குளிச்சியாக குடிக்கலாம்.


கேரட்டும் எலுமிச்சை


ஊட்டச்சத்து அதிகம் கொண்ட ஒரு காய்கறி தான் கேரட். உடல் ஆரோக்கியத்தும், கண் பார்வை, தோல் புத்துணர்ச்சி ஆகியவற்றுக்கு கேரட் மிகச்சிறந்த ஒன்று.  கேரட்டில் உள்ள ஊட்டச்சத்து ஏ தோலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து பளபளவென வைத்திருக்கிறது. கேரட்டை நன்கு அரைத்து அதை தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். அதில் சிறிய அளவு ஐஸ் கட்டிகளையும், தேவையான அளவு எலுமிச்சை சாறையும் கலந்து குடிக்கலாம்.


மேலும் படிக்க | hair dye: முடி சாயம் டெம்ப்ரவரியா அழகாக்கும்! ஆனா, வேற பிரச்சனைகளை வரவேற்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ