பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லுவதில் அவசரம் காரணமாக காலை சிற்றுண்டி உண்ணுவதை பலரும் தவிர்த்து விடுகின்றனர். சிலர் இதனை பழக்கமாகவே மாற்றிக்கொண்டு விட்டிருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாக ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த சென் என்ற 45 வயது பெண்மணிக்கு முதல் முறையாக வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது, பின்னர் அது தொடர்ந்தும் வந்துள்ளது. 


மருத்துவ பரிசோதனையில் கற்கள் இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது, எனினும் அறுவை சிகிச்சை மீது அச்சம் காரணமாக அவர் மருத்துவம் பார்க்காமலே தவிர்த்து வந்துள்ளார்.


சமீபத்தில் அவருடைய வயிற்று வலி தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


பரிசோதனையின் முடிவில் அவருக்கு பித்தப்பை, கல்லீரல் மற்றும் பித்தக் குழாய்கள் போன்ற பகுதிகளில் எண்ணற்ற கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 


அந்த பெண் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் முடிவில் சிறியதும், பெரியதுமாக 200க்கும் மேற்பட்ட கற்கள் அவரின் உடலில் இருந்து அகற்றப்பட்டது. 


அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இது தொடர்பாக கூறும்போது, கடந்த 8 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்து வந்துள்ளார். அதன் காரணமாகவே இவரின் உடலில் கற்கள் உருவாகியுள்ளது. 


காலை உணவை தவிர்ப்பவர்களின் பித்தப்பை சுருங்கி விரிவடையும் தன்மையை நிறுத்திவிடும், இது கற்கள் உருவாக வழிவகுக்கிறது. எனவே காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்பதே மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது.