Viagra: ஆண்மை குறைவு பிரச்சனையை தீர்க்கும் வயாகரா, அல்சைமர் நோயை தடுக்கிறது

வயாகராவில் பயன்படுத்தப்படும் சில்டெனாஃபில் (Sildenafil) என்ற மருந்து அல்சைமர் நோயின் அபாயத்தை 69 சதவீதம் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவு நேச்சர் ஏஜிங் (Nature Aging)இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளவர்களுக்கு வயாக்ரா ஒரு வரப்பிரசாதமாக உள்ள நிலையில், இந்த 'அதிசய மாத்திரை' அல்சைமர் நோயின் (Alzheimer) அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
வயாகராவில் பயன்படுத்தப்படும் சில்டெனாஃபில் (Sildenafil) என்ற மருந்து அல்சைமர் நோயின் அபாயத்தை 69 சதவீதம் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவு நேச்சர் ஏஜிங் (Nature Aging)இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகராவை, அல்சைமர்ஸ் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கிளீவ்லேண்ட் கிளினிக்கின் ஒரு குழு, சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளின் தரவுகளை ஆய்வு செய்தது. இந்த மருந்தை எடுத்துக் கொள்பவர்களின் மனித திசுக்களைக் கொண்டு ஆய்வகத்தில் மேற்கொண்ட பரிசோதனைகளில், இந்த மருந்தை உட்கொள்பவர்களின் மூளையில் செல் வளர்ச்சி அதிகரித்ததுள்ளதை கண்டறிந்தது.
ALSO READ | வினோத வழக்கு: இறந்த மகனின் விந்தணுவை திருப்பித் தருமாறு மருமகளிடம் கேட்கும் மாமியார்
ஆரம்பத்தில் வயாகரா (Sildenafil) மருந்து இதய நோய்க்கான மருந்தாகத்தான் தயாரிக்கப்பட்டது. ரத்த நாளங்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்த இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. பிறகு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஆணுறுப்பில் உள்ள ரத்த தமனிகளிலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது தெரிய வந்தது. அதன் பின்னர், ஆண்மை முறைபாடு, முக்கியமாக ஆணுறுப்பு விரைப்புத்தன்மைப் பிரச்னைக்காக, வயாகரா மருந்தாக மேம்படுத்தப்பட்டது.
சுமார் 6 வருட கால ஆராய்ச்சிக்கு பிறகு சில்டெனாபில் அல்லாத மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை விட சில்டெனாபில் மருந்து பயன்படுத்துபவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்பு 69 சதவீதம் குறைவாக இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்தது என கிளீவ்லேண்ட் கிளினிக்கின் ஜீனோமிக் மெடிசின் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஃபீக்சியோங் செங் கூறினார்.
ALSO READ | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!
"குறிப்பிடத்தக்க வகையில், இதய தமனி நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் டைப் -2 நீரிழிவு நோயாளிகளில் சில்டெனாபில் மருந்து, அல்சைமர் வருவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைப்பதை நாங்கள் கண்டறிந்தோம். மேலே குறிப்பிட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு மூளை சமப்ந்தமான நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்" என்று செங் மேலும் கூறினார்.
ALSO READ | Men's Health: ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR