COVID-19 Vaccine: 60+, நோய்வாய்ப்பட்ட 45+ நபர்களுக்கு மார்ச் 1 முதல் தொடக்கம்
இரண்டாம் கட்ட கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்ட தடுப்பூசி மார்ச் 1 முதல் தொடங்கும்.
நாட்டில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி மார்ச் 1 முதல் தொடங்கும். இரண்டாம் கட்ட கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படு என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javadekar) கூறினார்
மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி தொடங்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இதனுடன், 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
ALSO READ | 'Made in India' கோவிட் -19 தடுப்பூசிக்காக 25 நாடுகள் காத்திருக்கின்றன: S.ஜெய்சங்கர்
தடுப்பூசி போடும் பணியில் செயல்படும் நாட்டின் 10,000 அரசு மையங்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவோர் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தடுப்பூசியின் விலையை சுகாதார அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
தடுப்பு மருந்து பரிசோதனைக்கு பின், சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’(Covishield), பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்ஸின்’(Covaxin) ஆகிய தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை ஜனவரி 16ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) காலை 10.30 மணிக்கு துவக்கி வைத்தார்.
ALSO READ | விரைவில் வருகிறது Covovax.. SII வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR