இந்தியா இதுவரை 15 நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கியுள்ள நிலையில், மேலும் 25 நாடுகள் தடுப்பூசியை பெற காத்திருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து தடுப்பூசி பெற மூன்று வகை நாடுகள் ஆர்வமாக உள்ளன - ஏழை, குறைந்த விலையில் வாங்க விரும்பும் நாடுகள் மற்றும் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் மருந்து நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்யும் பிற நாடுகள்.
உலக நாடுகள் பலவற்றுக்கு தடுப்பூசி வழங்கிய இந்தியா (India), கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தனது முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளது என்று ஜெய்சங்கர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சில ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி மானிய அடிப்படையில் வழங்கப்படுவதாகவும், சில நாடுகள் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு என்ன விலை கொடுக்கிறதோ, அதே விலையில் வாங்க விரும்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
சில நாடுகளில் இந்திய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தங்கள் உள்ளன, வணிக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன, என்றார்.
இந்தியாவின் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு COVID-19 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, ஜனவரி மாதம் 16ம் தேதி இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இந்தியாவின் உள்நாட்டு திறன்களையும், Y2K பிரச்சினையின் போது இந்தியா தகவல் தொழில்நுட்பத் தலைவராக உருவெடுத்துள்ள நிலையில், நாட்டை "உலகின் மருந்தகம்" என்று நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோளாகும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
ALSO READ | தேச நலனையும் மக்களின் உரிமையையும் காக்க நீதித்துறை கடமையை செய்கிறது: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR